கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தைகளை கொன்ற தாய்

திருப்பூர் அருகே இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய், தானும் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-07-13 13:21 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பூமலூர் கிராமத்தில் வசித்து வரும் செந்தில்-சிவரஞ்சனி தம்பதி இடையே நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

கோபத்தின் உச்சத்தில் இருந்த சிவரஞ்சனி, கணவர் உறங்கிய பிறகு, இரு குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுள்ளார். பின்னர்,தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். சிவரஞ்சனியின்  அலறல் சத்தம் கேட்டு எழுந்த செந்தில், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

 குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த மங்கலம் போலீசார், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்