5 ஆண்டுகளில் தமிழக அரசு கடன் பொறியில் சிக்கி கொள்ள நேரிடும் - மத்திய கணக்கு தணிக்கை குழு

2012-13-ல் வருவாய் மிகை மாநிலமாக இருந்த தமிழகம், 2013-14ல் இருந்து வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-07-11 11:49 GMT
2012-13-ல் வருவாய் மிகை மாநிலமாக இருந்த தமிழகம்,  2013-14ல் இருந்து வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 2015-16ல் 32 ஆயிரத்து 627 கோடியாக இருந்த வருவாய் பற்றக்குறை 2016-17ல் 56 ஆயிரத்து 170 கோடியாக அதிகரித்துள்ளது. 


2016-17ம் ஆண்டில், அரசுக்கான வருவாயின் வளர்ச்சி, 8.70 சதவிதம் அதிகரித்துள்ளது, ஆனால் மற்ற மாநிலங்களில் 11.52 சதவிதமாக இந்த வளர்ச்சி இருக்கிறது.  

அரசு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றில் அரசு செய்த முதலீடு 29,811 கோடி. இந்த வகையில் முதலீடுகளில், தமிழக அரசுக்கு 0.62 சதவிதம் மட்டுமே வருமான கிடைத்துள்ளது. ஆனால் வங்கிய கடனுக்கு கட்டிய வட்டி, சராசரியாக 8.11 சதவிதம்


தமிழகத்தின் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2015-16ல் 2 லட்சத்து 23 ஆயிரத்து 30 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் 2016-17ல் 2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடி. 

 தமிழக அரசுக்கு நிலுவையில் உள்ள கடன்களின் அளவு, 2015-16ம் ஆண்டு இருந்ததை விட 11.96 சதவிதம் அதிகரித்துள்ளது.   கடன்களுக்கு செலுத்தும் வட்டி மட்டும் 20 ஆயிரத்து 533 கோடி. இது தமிழகத்தின் ஆண்டு வருமானத்தில் 14.64 சதவிதம். 


தமிழகத்தில் பெறப்படும் கடன் 5 ஆண்டுகளுக்கு பின் செலுத்தப்படுகிறது. இந்த கடன் சுமை தமிழகத்தை கடன் பொறியில் சிக்கி கொள்ள செய்யும்.

Tags:    

மேலும் செய்திகள்