தனியார் பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் - அரசாணையை 2 மாதத்திற்குள் திருத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளிகளை கண்காணிக்க கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
* தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கண்காணிக்க, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி, கடந்த மே மாதம் 18-ஆம் தேதி தமிழக பள்ளிக்கல்வி துறை அரசாணை பிறப்பித்தது.
* இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், பள்ளிகளை கண்காணிக்க கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
* இந்த வழக்கு நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் தண்டபாணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பள்ளிகளை நிர்வகிக்க ஏற்கனவே சட்டங்கள் உள்ள நிலையில், புதிய அரசாணை சட்ட விரோதமானது என தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தமிழக அரசின் அரசாணையில் தலையிட முடியாது என தெரிவித்தனர். குறைகளை நிவர்த்தி செய்து 2 மாதங்களில் திருத்தப்பட்ட அரசாணையை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.