மீன் பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா? - மீன் சந்தைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
மீன்களை பதப்படுத்த பார்மலின் உள்ளிட்ட ரசாயனப பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து மீன் சந்தைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
மீன் பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா?
மீன்களை பதப்படுத்த பார்மலின் உள்ளிட்ட ரசாயனப பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மீன் சந்தைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காசிமேடு, சைதாப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை ஆகிய 3 இடங்களில் உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறையினர் இணைந்து இந்தச் சோதனை நடத்தினர். இதில் பதப்படுத்தப்பட்ட மீன் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். ஆய்வு முடிவு வந்த பி்ன்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.