சென்னையில் உள்ள புராதான கட்டடங்கள் அழிவின் விளிம்புக்கு அணிவகுக்கிறதா?

சென்னையில் உள்ள புராதான கட்டடங்கள் அழிவின் விளிம்புக்கு அணிவகுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாதுக்காக்கும் முயற்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் களத்தில் இறங்கியுள்ளது.

Update: 2018-07-06 11:00 GMT
அழிவின் விளிம்பில் புராதனச் சின்னங்கள்

சென்னைக்கு பல அடையாளங்கள் இருந்தாலும் அதன் அழகைக் கூட்டும் வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய இருப்பது புராதான கட்டடங்கள்தான். சென்னையின் அதிவேக வளர்ச்சியில் இந்த அரிய சின்னங்கள் அழிவின் விளிம்புக்கு அணிவகுக்கத் துவங்கியது. இவற்றை பழமை மாறாமல் மீட்டெடுக்கும் முயற்சியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 அரசு பள்ளிகளில் காவல்துறை சார்பில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்திற்கு உட்பட்ட சித்தாதூர், அரகண்டநல்லூர் உள்பட 3 இடங்களில் நூலகம் திறக்கப்பட்டுள்ளன. சித்தாதூரில் அமைக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். ஏற்கனவே உள்ள நூலகங்களில் குறிப்பிட்ட அலமாரிகளை ஒதுக்கீடாக பெற்று அங்கு காவல்துறை சார்ந்த புத்தகங்களை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவல்துறையின் புதிய முயற்சியை, ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புராதன சின்னங்களாக 192 கட்டடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ரிப்பன் மாளிகை, கிறிஸ்தவ தேவலாயங்கள், கோயில்கள் என பல கட்டடங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து, கட்டட கலையின் நுட்பம் மாறாமல் அதை வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வரலாற்றின் அடையாளங்களாக அணிவகுக்கும் புராதன சின்னங்கள், கட்டடங்களை பாதுகாக்க புராதன சின்னம் பாதுகாப்பு சட்டம் இயற்ற ​வேண்டும் என தமிழக அரசை கட்டடவியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்