தமிழகத்தில் ரூ.12.98 கோடியில்..?ககன் தீப் சிங் கொடுத்த அப்டேட் | Tamilnadu Government
மத்திய அரசின் 60 சதவீதம், மாநில அரசின் 40 சதவீதம் பங்களிப்புடன் தமிழகத்தில் ஆயுஷ் மருத்துவ கட்டமைப்பு அதிகரிக்க பல்வேறு நடவக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தமிழகத்தில் 12 கோடியே 98 லட்சம் செலவில் 100 ஆயுஷ் மருத்துவ நிலையம் உருவாக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளதாகவும் தமிழக அரசு பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தி இதை ஒப்புகொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை தவிர, 50 அரசு சுகாதார நிலையகளில் சித்தா பிரிவு உருவாக்கவும் ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.