கத்தாருக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் நேபாள வீரர் தீபேந்திர சிங் அய்ரி, ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்து அதகளப்படுத்தினார். ஓமனில் நடைபெற்ற ஏ.சி.சி ப்ரீமியர் கோப்பை லீக் போட்டியில் கத்தார் பவுலர் கம்ரான் கான் வீசிய ஓவரில் ஆறு சிக்சர்களை தீபேந்திர சிங் அய்ரி பறக்கவிட்டார். இதன்மூலம் யுவராஜ் சிங், பொலார்டுக்குப் பிறகு டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை தீபேந்திர சிங் அய்ரி பெற்றுள்ளார்.