சொந்த மண்ணில் பஞ்சாப்பை வீழ்த்திய குஜராத் | punjab kings | gujarat titans

Update: 2024-04-22 04:01 GMT

சொந்த மண்ணில் பஞ்சாப்பை வீழ்த்திய குஜராத்

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...பஞ்சாபில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.பஞ்சாப் அணி தரப்பில் ஹர்பிரீத் பிரர் 12 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தும், சாம் கரன் 19 பந்துகளில் 20 ரன்களை எடுத்தும் ஆட்டமிழந்தனர்.மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 142 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது.இதைத் தொடர்ந்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி ஆட்டத்தை தொடங்கியது.குஜராத் அணியில் அதிரடியாக விளையாடிய ராகுல் தெவாட்டியா 18 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 36 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.முடிவில், 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்