வினோதமாக அவுட்டான ஜடேஜா.. அது என்ன OBS முறை அவுட்?

Update: 2024-05-13 03:20 GMT

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஃபீல்டருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக சி.எஸ்.கே வீரர் ஜடேஜாவிற்கு மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்தார். ஆட்டத்தின் 16வது ஓவரில் பிட்ச்சின் பக்கவாட்டில் ரன் ஓடாமல், ஸ்டம்பிற்கு நடுவே ஜடேஜா ஓடினார். அப்போது சஞ்சு சாம்சன் ரன் அவுட் செய்ய முயன்றபோது பந்து ஜடேஜா மீது பட்டது. இதனையடுத்து, ஃபீல்டருக்கு இடையூறு செய்ததாக சாம்சன் அப்பீல் செய்த நிலையில், 3ம் நடுவர் ஜடேஜாவிற்கு அவுட் அளித்தார். ஐபிஎல் தொடரில் யூசுப் பதான், அமித் மிஸ்ராவிற்கு அடுத்து OBS முறையில் ஜடேஜா ஆட்டமிழந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்