வாஷிங்டன் சுந்தர் சுழலில் நொறுங்கிய நியூசி.

Update: 2024-10-25 00:42 GMT

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து கேப்டன் டாம் லாதம் - கான்வே தொடக்க ஜோடி களமிறங்கிய நிலையில் லாதம் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் யங் 18 ரன்களுக்கு கேட்ச் ஆனார். 3வது விக்கெட்டுக்கு கான்வே - ரச்சின் ரவீந்திரா ஜோடி சிறப்பாக ஆடியது. அரைசதம் அடித்த கான்வே 76 ரன்களிலும், ரச்சின் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரின் அபார பவுலிங்கில் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் அசத்த, 259 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து ஆல்-அவுட் ஆனது.

Tags:    

மேலும் செய்திகள்