மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய மகளிர் அணி, தொடரை கைப்பற்றி அசத்தியது. பெங்களூரில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி, 40.4 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 220 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகி விருதை பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மாவும், தொடர் நாயகி விருதை ஸ்மிரிதி மந்தனாவும் கைப்பற்றினர்.