குரூப் ஏ பிரிவில் ஷார்ஜாவில் இரவு 7.30க்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. அரையிறுதிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி இன்றைய போட்டியில் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்பதால் போட்டி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.