கடந்த டிசம்பர் மாதம் ஸ்டாப் கிளாக் எனும் புதிய விதியை சோதனை அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமல்படுத்தியது. இதன்படி, ஒரு ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீசும் அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும் என்றும், நேரக்கட்டுப்பாட்டை 2 முறை மீறினால் பந்துவீசும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக அளிக்கப்படும் என்றும் ஐசிசி தெரிவித்தது. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஸ்டாப் கிளாக் விதி லிமிடெட் ஓவர் போட்டிகளில் கட்டாயமாக்கப்படுவதாக ஐசிசி கூறியுள்ளது. டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே இருப்பதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.