8ம் வகுப்பு மாணவியின் வேற லெவல் சாதனை.. வாய்பிளக்க வைத்த அரசு வழங்கிய கவுரவம்

Update: 2024-10-02 03:29 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த, எட்டாம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவியான சுஜி, சிலம்பாட்டத்தில் ஆர்வம் கொண்டுள்ளார். மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்குபெற்றுள்ள சுஜி, பல பரிசுகளை வென்றுள்ளார். இதையடுத்து மாணவி சுஜிக்கு, தமிழ்நாடு அரசு 'கலை இளமணி விருது' வழங்கியுள்ளது. தனது பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்த மாணவி சுஜி, சிலம்பாட்டத்தில் கலைமாமணி விருது பெறுவதே லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்