சதங்களின் நாயகன்.. யுகத்தின் தலைவன் - கிரிக்கெட்டின் சகாப்தத்துக்கு வயது 49..!
சச்சின்... சதங்களின் நாயகன்... கிரிக்கெட்டின் சகாப்தம்... இளைஞர்களின் உத்வேகம்... ரசிகர்களின் உற்சாகம்...

களத்தில் நிற்கும் ஒவ்வொரு நொடியிலும் மக்களை எதிர்பார்ப்பென்னும் இருக்கை நுனியில் அமர வைத்து எதிர்வரும் பந்துகளையும்... பந்து வீசும் பவுலர்களையும் அலற விட்ட "லிட்டில் மாஸ்டர்"
இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் "கிரிக்கெட் ஜாம்பவானாக" போற்றப்படுபவர் சச்சின்...
சச்சின் பர்க்காத புகழில்லை...வாங்காத பெயரில்லை...
கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகள் ஏராளம்...
குறிப்பாக 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி ஷார்ஜாவில் விறுவிறுப்பான போட்டி நடந்து கொண்டிருந்தது... இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருக்க இடையில் வீசிய மணற்புயல் ஆட்டத்தைத் தடுத்து நிறுத்தியது... மணற்புயல் தான் ஓய்ந்தது...புயலை விஞ்சும் வகையில், "ஒன் மேன் ஷோ" வாக சச்சின் சுழன்று சுழன்று பந்துகளை சிக்சர்களுக்கு பறக்க விட்டதில் உலகமே குழம்பிப் போனது, வீசியது மணற்புயலா...சச்சின் புயலா என்று!...
ப்ரீத்...
இதற்கு இரண்டு நாட்கள் கழித்து ஏப்ரல் 24 அன்று நடந்த இறுதிப் போட்டியில் சச்சின் சதம் அடிக்க, இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது... சச்சினின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத பிறந்த நாள் அது.
கிரிக்கெட் மட்டுமல்லாது பொதுவாழ்க்கையிலும் அதிக ஈடுபாடு கொண்ட சச்சின், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
பொதுவாக சில பிரபலங்கள் தங்களின் நல்ல பெயரை எல்லாம் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் கெடுத்துக் கொள்வார்கள். சமீபத்தில் கூட 2.0 நடிகர் அக்ஷய் குமார் புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. அதற்காக அவர் மன்னிப்பே கேட்டார்.
ஆனால், இந்த விஷயத்தில் சச்சின் அனைவருக்கும் முன்னுதாரணம் எனலாம். பணத்திற்காக அவர் ஒரு போதும் பொதுமக்களின் உடல்நலனை விலையாய் கேட்கும் புகையிலை மற்றும் போதை வஸ்துக்கள் தொடர்பான விளம்பரங்களில் நடித்ததே இல்லை.
சக மனிதர்கள் மீது அந்தளவுக்கு அக்கறை சச்சினுக்கு இருப்பதால்தான் அவர் மீதான ரசிகர்களின் அக்கறை இன்னும் குறையாமலே இருக்கிறது.