சென்னை அணி ஹாட்ரிக் தோல்வி...350வது டி-20 போட்டி ஆடிய தோனி - நேற்றைய போட்டியின் முக்கிய சம்பவங்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை-பஞ்சாபுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியின் முக்கிய நிகழ்வுகளைத் தற்போது காணலாம்.

Update: 2022-04-04 15:27 GMT
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை-பஞ்சாபுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியின் முக்கிய நிகழ்வுகளைத் தற்போது காணலாம். சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நேற்றைய போட்டியில் ஆடியதன் மூலம், 350 டி-20 போட்டிகளில் ஆடியுள்ள 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். பஞ்சாப் பேட்டிங்கின்போது பவுண்டரி மழை பொழிந்த லியாம் லிவிங்ஸ்டன், 108 மீட்டர் தூரத்துக்கு இமாலய சிக்சர் அடித்து ரசிகர்களை புருவம் உயர வைத்தார். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் கலக்கிய லிவிங்ஸ்டன், சென்னை அணியின் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஞ்சாப் பவுலர்கள் ராகுல் சஹார் 3 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, தங்கள் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபிடம் சரணடைந்த சென்னை, நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வீழ்ந்து ஹாட்ரிக் தோல்வி கண்டுள்ளது. சென்னை அணியில், நேற்று 6 பேட்டர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்ததும், ஃபீல்டிங்கில் சில கேட்சுகளைக் கோட்டைவிட்டதும் தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்