மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் - வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்த இந்தியா!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்றது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்றது. ஹாமில்டனில் இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடர்ந்து இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த மந்தனாவும் ஹர்மன்ப்ரீத் கவுரும் சதம் அடித்து அசத்தினர். இதனால், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, இந்தியா 317 ரன்கள் குவித்தது. பின்னர் 318 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்தியத் தீவுகளில், தொடக்க வீராங்கனைகள் அதிரடி காட்டினர். எனினும் மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால், 41வது ஓவரில் 162 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்னே ரானா 3 விக்கெட்டுகளையும், மேக்னா சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும், இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் இந்திய மகளிர் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.