டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி : வெண்கலம் வென்ற லவ்லினா - மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அனுராக் தாகூர் டுவிட்டரில், லவ்லினாவை எண்ணி இந்தியா பெருமை கொள்வதாக கூறி உள்ளார். இதேபோல், அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பதக்கம் வென்ற அசாம் மாநில மகள் லவ்லினாவுக்கு வாழ்த்துகள் என்றும், அசாம் வரலாற்றில் லவ்லினாவின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றும் டுவிட்டரில் கூறி உள்ளார்.