2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - இந்தியாவுக்கு முதல் பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்து உள்ளது.
இன்று நடந்த மகளிர் 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கிய சானு, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் அதிகபட்சமாக 115 கிலோ எடையை தூக்கி அசத்தினார். இரு பிரிவையும் சேர்த்து 202 கிலோ எடையை தூக்கிய அவர், வெள்ளிப் பதக்கத்தையும் வென்று வரலாற்று சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் சீன வீராங்கனை தங்கப் பதக்கத்தையும், இந்தோனேசிய வீராங்கனை வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.