இந்த ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை ரத்து - 87 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை
87 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கொரோனா பரவல் காரணமாக ரஞ்சி கிரிக்கெட் போட்டி முதல் முறையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
87 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கொரோனா பரவல் காரணமாக ரஞ்சி கிரிக்கெட் போட்டி முதல் முறையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் தொடரான ரஞ்சி கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடக்க இருந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டியை ரத்து செய்து உள்ளதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார். மேலும் ரஞ்சி கிரிக்கெட் ரத்தால் வருவாய் இழந்த வீரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் விஜய் ஹசாரே கோப்பை, பெண்களுக்கான தேசிய அளவிலான ஒருநாள் போட்டி, மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான வினோ மன்கட் கோப்பைக்கான ஒருநாள் போட்டி உள்ளிட்ட தொடர்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.