தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி-20 போட்டி- இங்கிலாந்து அணி திரில் வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.
செஞ்சுரியனில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிளாசன், 33 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜேசன ராய் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஜாஸ் பட்லர், பாரிஸ்டோ அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர். கேப்டன் மார்கன், 22 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இதில் 7 இமாலய சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 5 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்று, தொடரையும் 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.