"உலக சாம்பியன் பட்டம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை : சோதனைகளை கடந்து சாதனை புரிந்த ஜெர்லின்"

சாதனை படைக்க உடல் குறைபாடு எந்த விதத்திலும் தடையில்லை என்பதை மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா நிரூபித்திருக்கிறார்.

Update: 2019-07-31 06:00 GMT
15 வயதே ஆன ஜெர்லின், தைவானில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக காது கேளாதோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் , ஜூனியர் பிரிவு ஒற்றையரில் தங்கம்  வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 
27 நாடுகள் கலந்து கொண்ட இந்த தொடரில்  இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும்,  சீனியர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் இந்தியா சார்பாக பங்கேற்ற 16 வீரர்களில் ஜெர்லின் அனிகா மட்டுமே தங்கம் வென்றவர் என்பதும் ,, 
உலக ஜுனியர் பிரிவு தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த அவர் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்