அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு வாய்ப்பு குறைவு

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-07-04 13:38 GMT
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதியை எட்டியுள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது. நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து, 400 ரன்கள் குவித்து வங்கதேசத்தை 316 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால் அரையிறுதிக்கு தகுதி பெறும், மாறாக இலக்கை துரத்தினால் எந்த வித வாய்ப்பும் இருக்காது.
Tags:    

மேலும் செய்திகள்