மின்னல் வேகத்தில் கேட்ச் செய்த ஜடேஜா
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையேயான லீக் ஆட்டத்தில், ரவீந்திர ஜடேஜா அற்புதமாக கேட்ச் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்
போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். போட்டியின் 22 ஓவரில் , குல்தீப் யாதவ் வீசிய பந்தை ஜேசன் ராய் லாங் ஆன் திசையில் தூக்கி அடித்தார். அதனை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ஜடேஜா கண் இமைக்கும் நேரத்தில் கேட்ச் செய்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.