ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மான்செஸ்டரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் விளாசி வெளியேறினார். தோனி 56 ரன்களும் , ஹர்திக் பாண்டியா 46 ரன்களும் எடுத்து, சரிவிலிருந்து அணியை மீட்டனர். 50 ஒவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. பின்னர் 269 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 34 புள்ளி 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 72 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.