பிரெஞ்ச் ஓபன் - ஆஸி. வீராங்கனை சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி(ASHLEIGH BARTY) அசத்தியுள்ளார்.

Update: 2019-06-09 05:22 GMT
பிரெஞ்ச் ஓபன் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி(ASHLEIGH BARTY) அசத்தியுள்ளார். பாரீஸில் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், செக் குடியரசு வீராங்கனையான வோன்ட்-ரோசோவா(VONDROUSOVA) உடன் ஆஷ்லி பார்டி மோதினார். இதில் 19 வயது இளம் வீராங்கனை வோன்ட்-ரோசோவாவை,  6-1,6-3 என்ற நேர்செட் கணக்கில் ஆஷ்லி பார்டி எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் கடந்த 46 ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை ஆஷ்லி பார்டி பெற்றுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்