இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியம் : ஓப்பந்த பட்டியலை வெளியிட்டது பி.சி.சி.ஐ.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் நடப்பாண்டிற்கான சம்பள ஓப்பந்தத்தை பி.சி.சி.ஐ. புதுப்பித்துள்ளது. அதன் படி ஷிகர் தவானின் சம்பளம் குறைந்துள்ளது.

Update: 2019-03-08 12:07 GMT
பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் தர வீரர்கள் பட்டியலில் கேப்டன் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய மூன்று வீரர்களுக்கு மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இவர்களின் ஆண்டு ஊதியம்  7 கோடி ரூபாய் முதல் தர பட்டியலில் இருந்த தவான் 2ஆம் தர பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்த பட்டியலில் தோனி, தவான், புஜாரா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டு ஊதியம் 5 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் நடப்பாண்டில் புதிய வீரராக ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். இவருக்கு ஆண்டு ஊதியம் 5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல், உமேஷ் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியாவுக்கு மூன்று கோடி ரூபாயாகவும், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோருக்கு ஓரு கோடி ரூபாயாகவும் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.புதிய ஓப்பந்த பட்டியலில் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்