சொந்த மண்ணில் திணறும் ஆஸி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

Update: 2019-01-04 05:15 GMT
சிட்னியில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி பேட் செய்தது.  ராகுல் சொற்ப ரன்களில் வெளியேற, மயங்க் அகர்வால் 77 ரன்கள் சேர்த்தார். கோலி 23 ரன்களிலும், ரஹானே 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய புஜாரா சதம் விளாசினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி, 4 விக்கெட்டு இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. 2வது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், சற்று முன்னர்வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 491 ரன்கள் எடுத்துள்ளது. 193 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புஜரா ஆட்டமிழந்ததால், இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு நலுவியது. 
Tags:    

மேலும் செய்திகள்