ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் : இந்திய அணி நிதான ஆட்டம்

கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்நோக்கியிருந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Update: 2019-01-03 08:36 GMT
சிட்னி மைதானத்தில் இன்று காலை தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்வதாக தீர்மானித்த‌து. அதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்கார‌ர், மீண்டும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆனால், மறு முனையில், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால், அரைசதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தார். தொடர்ந்து புஜாரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ச‌தத்தை பூர்த்தி செய்துள்ளார். சற்று முன்வரை, இந்திய அணி, 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 282 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தியதே இல்லை என்ற சோக வரலாறை முறியடித்த பெருமையை பெறும். அதே சமயம், ஆஸ்திரேலியா அணியும், வரலாற்று சாதனையை அவ்வளவு எளிதில் விட்டு கொடுக்காது என்பதால், ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக செல்கிறது. சிட்னி அரங்கமே ரசிகர்களின் கரவொலியால் அதிர்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி பெரும் தருணத்தை உலக கோப்பை வெற்றி போல, இந்திய அணி ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்