அமெரிக்க ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்றார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், குரோஷிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் அர்ஜென்டினா வீரர் டெல் போட்ராவை வீழ்த்தினார்.

Update: 2018-09-10 13:18 GMT
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம், இந்திய நேரப்படி அதிகாலை நடைபெற்றது. தர வரிசையில் 6 - வது இடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் -சும், 3 - வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா வீரர் டெல் போட்ராவும் மோதினர். 

ஆரம்பம் முதலே, ஜோகோவிச்சின் கையே ஒங்கி இருந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6 க்கு 3, 7 க்கு 6, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதுவரை ஜோகோவிச், ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ரோஜர் ஃ பெடரர், ரபேல் நடால் ஆகியோரை அடுத்து, பீட் சாம்ரஸூடன் 3 - வது இடத்தை ஜோகோவிச் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்