இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

Update: 2018-08-13 07:25 GMT
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. 

இதனையடுத்து, 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இந்திய அணி  47 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்