உலகக் கோப்பை கால்பந்து தொடர் - பட்டம் வெல்ல 32 அணிகளுக்கு இடையே போட்டி

உலகக் கோப்பை கால்பந்து தொடர் - பட்டம் வெல்ல 32 அணிகளுக்கு இடையே போட்டி..சாதிக்குமா பிரேசில், ஜெர்மனி அணி, கோப்பையை வெல்வாரா நட்சத்திர வீரர் மெஸ்ஸி

Update: 2018-06-13 11:09 GMT
உலகக் கோப்பை கால்பந்து தொடர் - பட்டம் வெல்ல 32 அணிகளுக்கு இடையே போட்டி..சாதிக்குமா பிரேசில், ஜெர்மனி அணி, கோப்பையை வெல்வாரா நட்சத்திர வீரர் மெஸ்ஸி

அதிக மக்களால் பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நாளை தொடங்குகிறது. 32 அணிகள் எட்டு பிரிவுகளாக மோதும் இந்த தொடர் ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரஷ்யாவில் 11 நகரங்களில் கால்பந்து போட்டிகளில் நடைபெறுகிறது

ரவுண்ட் ராபின் முறைப்படி முதலில் லீக் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 அணிகள் பிடிக்கும் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும். அந்த சுற்றுகள் நாக் அவுட் முறைப்படி நடைபெறும்

உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக ஐஸ்லாந்து, பனாமா அணிகள் களமிறங்குகிறது

இம்முறை உலகக் கோப்பையை வெல்ல நடப்பு சாம்பியனான ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய அணிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்