"டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு பாராட்டு"

மாட்டு வண்டியில் பாராட்டு மேடைக்கு சென்ற முதலமைச்சர்

Update: 2020-03-07 20:29 GMT
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக, விவசாய சங்கங்கள் சார்பில், திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு  பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சருக்கு, காவிரி காப்பாளன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவால் திருவாரூர் விழாக்கோலம் பூண்டிருந்தது. நிகழ்ச்சியில்
பங்கேற்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாயிகள் மேள, தாள முழங்க, ஆட்டம் பாட்டத்தோடு வரவேற்பு அளித்தனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாட்டு வண்டியில் விழா மேடைக்கு வந்தார்.

டெல்டா மாவட்டத்தில், எட்டு உணவு பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படும் என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நவீன தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள விவசாயிகளை வெளிநாடு அழைத்துச்செல்ல உள்ளதாக கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்