நெல்லை மண்ணுக்கு முதலமைச்சர் சிறுமை செய்ததாக, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழக விஞ்ஞானிகளை அழைத்து கெளரவித்த முதலமைச்சர்,
நெல்லை மண்ணின் மைந்தர்களான மங்கள்யான் திட்ட இயக்குனர் அருணன் சுப்பையா, விஞ்ஞானி நம்பி நாராயணனை புறக்கணித்தது ஏன்? என வினவியுள்ளார்.