புகழ்பெற்ற இலங்கை நல்லூர் கந்தசாமி கோயிலில் மத்திய நிதியமைச்சர் சாமி தரிசனம்
இலங்கை சென்றுள்ள இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சாமிதரிசனம் செய்தார். கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர், அங்கு இருந்த பொதுமக்கள், சிறுவர்களிடம் கலந்துரையாடியதோடு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.