இளைஞர்களுக்கு குட் நியூஸ் - சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி கொடுத்த உறுதி
சட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அவர், 33 விளையாட்டு உபகரணங்களை கொண்ட கலைஞர் sports kit அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்படும் என்றார். 9 சட்டமன்ற தொகுதிகளில் மினி ஸ்டேடியம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், மற்ற தொகுதிகளில் ஆய்வு செய்து மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். சேலம் மாவட்டத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் multi purpose sports stadium அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதத்திற்குள் பணிகள் தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும், கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான பணிகள் இந்தாண்டு தொடங்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி உறுதிப்பட தெரிவித்தார்.