"மாததோறும் ரூ.3600 வழங்க வேண்டும்" - அண்ணா தொழிற்சங்க நிர்வாகி வலியுறுத்தல்

Update: 2024-08-28 05:31 GMT

சென்னை குரோம்பேட்டையில் மாநகர போக்குவரத்து கழகத்தின், 15-வது ஊதிய ஒப்பந்த குழு முதற்கட்ட பேச்சு வார்த்தை நிறைவடைந்தது. இதில் எண்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்களில் இருந்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்பு பேசிய அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலகண்ணன், ஏற்கனவே 54 கோரிக்கைகளை கொடுத்துள்ள நிலையில், தற்போது 4 கோரிக்கைகளை கொடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இடைக்கால நிவாரணமாக 3 ஆயிரத்து 600 ரூபாய் வழங்கினால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்