போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு? - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 13 புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளை அமைச்சர்கள் சிவசங்கரன், ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் 36 வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளதாக கூறினார். அதேபோல முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று புதிய கொள்கை அறிவிக்கப்பட்டு, சென்னையில் மினி பேருந்துகள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மேலும், 500 எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாகவும், அதில் தற்போது 100 பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் நடைமுறையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.