தமிழ்நாடு மலையேற்ற திட்டத்திற்கான இணையதள முன்பதிவு வலைதள பக்கத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மலையேற்ற திட்டத்திற்கான இணையதள முன்பதிவு வலைதள பக்கத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் 40 அழகிய மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய, தமிழ்நாடு மலையேற்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்கள் இணையவழி வாயிலாக முன்பதிவு செய்வதற்கான, TREK TAMIL NADU.COM என்ற வலைதள பக்கத்தினையும், இத்திட்டத்தின் லச்சினையையும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.