சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். தீர்மானத்தின் மீது பேசிய பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வார்த்தைகளை அளந்து பேச வேண்டுமென தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அவைக்கு தொடர்பில்லாதததை, உண்மைக்கு புறம்பாக யாரும் பேசவில்லை என்று தெரிவித்தார். பின்னர் தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.