"வன்னியர் மட்டுமல்ல எல்லாருக்கும்..." - திருமாவளவன் சொல்லும் பாயிண்ட்

Update: 2024-08-06 05:27 GMT

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் வன்னியர் சமூகத்தினர் மட்டுமல்ல மற்ற சமூகத்தினரும் பயன் பெறுவார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, விதிமீறலில் ஈடுபட்டதாக, அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த‌ அவர், இதுபோன்ற வழக்குகளை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சாதிவாரி கணக்கெடுப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரிக்கிறது என்றும், சமூக நீதி, அனைத்து சமூககத்திற்கும் பரவலாக சென்று சேர வேண்டும் என்பதில் யாரும் மாறுபடுவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்