"போலி வேட்பாளர்களால் என் வெற்றி தடுக்கப்பட்டது" கதறும் சுயேட்சை வேட்பாளர்
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் பிரதான கட்சிகள் போலி வேட்பாளர்களை களமிறக்கியதாக, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் சுயேட்சை வேட்பாளர் எஸ்.பாண்டிகுமார் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனி தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், தமிழகத்தின் ஒவ்வொரு முன்னணி அரசியல் கட்சியும் 3 முதல் 4 போலி வேட்பாளர்களை களமிறக்கியதாக கூறியுள்ளார். இதனால் தனது வெற்றி தடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.