`மத்திய பட்ஜெட்' பீகார், ஆந்திரா காட்டில் மழை - சந்தோஷத்தில் பூரிக்கும் முதல்வர்கள்
மத்திய பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டோம், இப்போது பீகாருக்கான சிறப்பு உதவியை வழங்க தொடங்கியிருக்கிறார்கள். சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பலரும் கூறினார்கள், இப்போது அதற்கு மாறாக பீகாருக்கு உதவியை வழங்க தொடங்கியிருக்கிறார்கள் என்றார்.
மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். மாநிலத்தின் தேவைகளை அறிந்து வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நன்றியை தெரிவித்திருக்கும் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் பட்ஜெட் என கருத்து தெரிவித்துள்ளார்