சிக்கிம் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ளது. வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், பெண்களால் மட்டுமே நடத்தப்படும் "அம்மா கேண்டீன்" என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். தமிழகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற அம்மா உணவகத்தை போலவே, அதே பெயரில் மலிவு விலையில் உணவகம் திறக்கப்படும் என பா.ஜ.க. சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.