``லேடி சிங்கம் To பாஜக ஏஜெண்ட்.. வீடியோவ லீக் பண்ணுங்க'' - கலகலகக்கும் கெஜ்ரிவால் கூடாரம்
தன் மீதான ஊழல் வழக்கு குறித்து டெல்லி அமைச்சர்கள் பொய்களை பரப்பி வருவதாக ஸ்வாதி மாலிவால் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2016ல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வரால், டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக இரண்டு முறை நியமிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த வழக்கு போலியானது, பண பரிவர்த்தனை நடைபெறவில்லை என்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, ஒன்றரை ஆண்டுகள் தடை விதித்திருந்ததாகவும் ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார். பிபவ் குமாருக்கு எதிராக புகார் கொடுக்கும் முன்பு வரை, ஆம் ஆத்மி கட்சியினருக்கு லேடி சிங்கமாக இருந்ததாகவும், தற்போது பாஜகவின் ஏஜெண்டாகி விட்டதாகவும் விமர்சித்துள்ளார். தன்னைப்பற்றி வீடியோ இருந்தால் கசிய விடுங்கள் என்று கட்சியினரிடம் நிர்வாகிகள் கேட்டுள்ளதாகவும், தனது உறவினர்களின் விவரங்களை ட்வீட் செய்து, அவர்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் ஸ்வாதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் பரப்பும் ஒவ்வொரு பொய்க்காகவும், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வேன் என்று ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.