தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு முன்னணி நிறுவன நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கெஸ்டம்ப், டால்கோ, எடிபன், மேப்ட்ரீ நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இறுதியாக எடிபன் நிறுவனம் தமிழ்நாட்டில் 540 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வெற்றிகரமான ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று புறப்படுவதாகவும், ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகங்கள் தனக்களித்த வரவேற்பையும், அன்பையும் நினைத்து பெருமை கொள்வதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.