ராஜேந்திர பாலாஜி புறக்கணிப்பா? - ஈபிஎஸ் மேடையில் இல்லாததால் குழப்பத்தில் அதிமுகவினர்
எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டையில் அதிமுக ஒன்றியச் செயலாளர் யோகா வாசுதேவன் மகன் திருமணம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்காததால் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது...