ராகுலை மன்னிக்கவே முடியாது...பாஜகவுக்கு தமிழகம் கொடுத்த ரிசல்ட் - மக்களவையில் கண்சிவக்க மோடி ஆவேசம்

Update: 2024-07-03 10:15 GMT

மக்களவையில் இரண்டரை மணி நேரம் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் குழந்தைத்தனமாக நடந்துக்கொள்கிறார் என்பதற்காக ராகுல் காந்தியை மன்னிக்க முடியாது எனவும் பிரதமர் ஆவேசமாக தெரிவித்தார்.

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரையாற்றினார்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பேசிய பிரதமர் மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய கவுரவம் என பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ்க்கு எதிர்க்கட்சி வரிசையில் அமரவே வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

(1984 க்கு பிறகு 10 முறை நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் 250 இடங்களை கூட பெற முடியவில்லை.. தற்போது காங்கிரஸ் கட்சி 100க்கு 99 எடுக்கவில்லை... 543க்கு 99 எடுத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்)

குழந்தைத்தனமாக நடந்துக்கொள்கிறார் என்பதற்காக ராகுல் காந்தியை மன்னிக்க முடியாது என. பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.

ராகுல் காந்தி ஒரு குழந்தையை போல மக்களவையில் பேசினார். இந்த குழந்தை புத்திதான் மக்களவையில் ஒருவரை திடீரென்று கட்டிப்பிடிக்கும் மற்றவரை பார்த்து கண்ணடிக்கும்)

பொய்யான தேர்தல் அறிக்கையால் பாதிக்கப்பட்ட பெண்களின் சாபம் காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் எனவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.

(பெண்களுக்கு மாதம் 8500 ரூபாய் வழங்கப்படும் என பொய் கூறிவிட்டது காங்கிரஸ். அவர்கள் கொடுத்த வாக்குறுதி மீண்டும் அவர்களையே அழிக்க போகிறது)

இந்துக்களை வன்முறைவாதிகளாக காங்கிரஸ் சித்தரிப்பதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

(இந்துக்கள் எல்லாம் வன்முறைவாதிகளா? இதுதான் உங்களின் எண்ணமா? இந்துக்களின் சகிப்புத்தன்மை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இந்து மக்களை அவதூறு செய்வதுதான் ராகுலின் பண்பாடா? இந்து சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும்)

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என பிரதமர் உறுதி அளித்தார்.

(நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. மத்திய அரசு முதன்முறையாக போட்டித் தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க மிகப்பெரிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது)

இறுதியாக மோடி பயப்படுபவன் அல்ல, தனது அரசும் பயப்படும் அரசு அல்ல எனக்கூறி இரண்டரை மணி நேர பதிலுரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்