முதல் நாளே களத்தில் இறங்கிய எம்.பி "எந்த சக்தியாலும் தொட முடியாது.." ஓப்பனாக அடித்த ராகுல் காந்தி

Update: 2024-06-24 11:57 GMT

18 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் நாள் கூட்டத்திலேயே, நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அரசியல்சாசன புத்தகத்தை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் போராட்டத்திற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அரசியல் சாசனம் மீது தொடுக்கும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது, அதனை நடக்க விடமாட்டோம் என்றார். நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் போது அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்திருந்தோம் என்ற ராகுல் காந்தி இந்திய அரசியல் சாசனத்தை எந்த சக்தியாலும் தொட முடியாது எனவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்