"உலகின் சக்திவாய்ந்த தலைவரா பிரதமர் மோடி?" - பிரியங்கா காந்தி பரபரப்பு பேச்சு

Update: 2024-04-21 14:22 GMT

சத்தீஸ்கர் மாநிலத்தில் கான்கேர் மக்களவை வேட்பாளர் பிரேஷ் தாக்கூரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பை மாற்றி, மக்களின் உரிமைகளைக் குறைக்க விரும்புகிறது என்று கூறினார். அரசியலமைப்பில் ஏற்படும் எந்த மாற்றமும் அனைவரையும் பாதிக்கும் என்றும், கேள்விகள் கேட்பது உட்பட உரிமைகள் இழக்கப்படுவதால், மக்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ முடியாது என்று கூறினார். பிரதமர் மோடி உலகின் சக்திவாய்ந்த தலைவராக மாறிவிட்டார் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர் என்றும், அப்படி இருந்தால், அவர் ஏன் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கவில்லை, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று, பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்